இவர்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள்.

Posted on Saturday, October 10, 2009 by sinthu






















இவர்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள்.
இவர்கள் உலகில் வாழப்பிறந்தவர்கள்,எனினும் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி தவிக்கிறார்கள்.

நமக்கு கடவுள் எவ்வளவோ கொடுத்தும் நாம் அது போதவில்லை என்று
நினைக்குறோம், அனால் அவர்களுக்கு அப்படி நினைக்க கூட ஒன்றும் இல்லை.
நமக்கு கடவுள் கொடுத்திருப்பதில் ஒரு சதவீதமேனும் இவர்களுக்கு கொடுக்க முன்வரவேண்டுகிறேன்.
கொடுப்பதில் வரும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை.
உங்கள்ளுக்கு வேண்டாதவைகளை பிறருக்கேனும் கொடுங்கள்.அவர்கள் மனம் சந்தோஷம் அடையும்.அந்த சந்தோஷம் உங்களுக்கும் வரும்.
நீங்கள் கொடுக்கும் போது அவர்கள் வாழ்த்தினால் அது உங்கள் மனதை குளுற்சியாக்கும் .அப்போது உங்கள் மனதில் எழும் சந்தோசத்திற்கு அளவே இல்லை.
நான் வாசித்த ஒரு சின்ன கதை ஒன்று எனக்கு ஞாபகம் வருது, என்ன தெரியுமா? ஒரு வழியில் ஒரு பெரியவர் நடந்துசென்றுகொண்டிருந்தார் அப்போது,அவர் ஒரு சிறுவன் பசியில் வாடிக்கொண்டிருந்தான் . அவனை பார்த்து "கடவுளே ஏன் இப்படியெல்லாம் மனிதர்களை படைக்கிறாய்?"என்று கூறிக்கொண்டு வீடிற்குவருகிறார். அன்று இரவு திடீர் என்று ஒரு ஓசைஎழும்பியது,அது"அதற்காகத்தான் நான் உன்னை படைத்தேன்" என்றுசொல்லி மறைந்தது .இதில் இருந்து என்ன தெரிகிறது? நாம் பிறருக்கு உதவி செய்ய படைக்கப்படிருக்கோம்.இதை நீங்கள் உணர்ந்தால் போதும்.
கடவுள் உங்களுக்கு கொடுத்த அனைத்திற்கும் நீங்கள் அவருக்கு நன்றி பல சொல்லவேண்டும். சொல்லுங்கள்.
நன்றி
ENJOY THE JOY OF GIVING.

0 Responses to "இவர்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள்.":